ஒரு குழந்தைக்கு அதன் தாய் உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். அதுவோ சாப்பிடாமல் அடம்பிடித்தது. "ஏன் உப்புமாவைத் திங்க மாட்டேங்கிற.... தொண்டையில ஊசி குத்துதோ..." என்றார்.
உடன் கி.வா.ஜ. அந்த உப்புமாவை வாங்கிக் கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டார். பிறகு, "ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்" என்றார்.
அந்த அம்மா ஒன்றும் புரியாமல் "ஏன்?" என்று கேட்டார்.
உடன் கி.வா.ஜ. "ஊசி இருக்கே..." என்றார் நமுட்டுச் சிரிப்புடன். |