தெரியுமா?: கொலராடோவில் தமிழ் கற்க உதவி
SVTC கவின்கலைப் பள்ளியின் திரு. செந்தில் கஜபதி அவர்களை கொலராடோ மண்டலத்துக்கான ஒருங்கிணைப்பாளராகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் இணையப் பல்கலையின் தமிழ் கல்விச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான பயிற்சிக்கு கஜபதி உதவுவார். தற்போது அவர் நடத்திவரும் வகுப்புகள்:

தொடக்கநிலை: ஞாயிறு மதியம் 1 முதல் 2 மணிவரை
நடுநிலை: ஞாயிறு மதியம் 2 முதல் 3 மணிவரை

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் சான்றிதழ் பெற்றவர்களுக்குச் சில அமெரிக்கக் கல்லூரிகளில் கிரெடிட் உண்டு என்பதை அறிந்திருக்கலாம்.

நந்து சங்கரன்,
கொலராடோ தமிழ்ச் சங்கம்

© TamilOnline.com