ஐஃபோன், ஐபேட் வழியே குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதை எளிதாக்கிவிட்டார்கள் செந்திலும் அனுராதாவும். கலிஃபோர்னியாவின் கூபர்டினோவில் வசிக்கும் இவர்கள் தமிழ் ஃப்ளாஷ் கார்டு என்ற ஐஃபோன் app ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
இந்த ஃப்ளாஷ் கார்டில் இருக்கும் உயிரெழுத்து, மெய்யெழுத்து அல்லது உயிர்மெய் எழுத்தை விரலால் தொட்டால் அதன் ஒலியை ஒரு குழந்தையின் குரலில் கேட்கலாம்! குழந்தைகளின் ஆர்வத்தை அதிகமாக்க அனிமேஷன் உண்டு.
மேலும் விவரம் அறிய: www.anusen.com
செய்திக்குறிப்பிலிருந்து |