நவம்பர் 2010: ஜோக்ஸ்
அவள்: என்ன நீ... உங்க மாமியாரை நாலுபேர் சேர்ந்து சாத்திக்கிட்டு இருக்காங்க. நீ வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்குறயே!
இவள்: சே....சே. நானும் அவங்களோட சேர்ந்து அடிச்சா நல்லாவா இருக்கும்...!

*****


மனைவி: எதுக்கு அடிக்கடி கிச்சனுக்குள்ளே வந்து சர்க்கரை பாட்டிலை எடுத்து எடுத்துப் பார்க்கறீங்க...
கணவன்: சர்க்கரை அளவை ரொம்ப கவனமாப் பாத்துக்கன்னு டாக்டர் சொன்னார். அதான்.

*****


கோபு: டேய், ஆடி ஆடி நடந்து போறாரே அவரு யாருடா?
பாபு: அவர்தான் ’ஆடி’ட்டர்...

*****


அவர்: சபாவுல பாதிக்கு மேல யாரையுமே காணோமே, ஏன்?
இவர்: கச்சேரி பண்றது சபாபதியாச்சே... அதான் சபா பாதியாயிருச்சு...

*****


அவன்: கழுதைக்குப் பிடிச்ச ரொட்டி என்னன்னு சொல்லு பார்க்கலாம்...
இவன்: சுவரொட்டி!

*****

© TamilOnline.com