மசாலா வெந்தயக்கீரை
தேவையான பொருட்கள்

வெந்தயக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம்
வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

நறுக்கிய வெந்தயக்கீரையைச் சிறிது உப்புக் கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், பிழிந்து எடுத்து வைத்துள்ள வெந்தயக்கீரையைப் போட்டு சற்று வறுத்துக்கொள்ளவும்.

அதே எண்ணெயில் சீரகம் போட்டு வெடித்ததும், வெங்காயம் இஞ்சி பூண்டு போட்டு நன்றாக வதக்கவும். வேண்டிய உப்பு, கரம் மசாலாத் தூள், மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி போடவும்.

சிறிது நேரம் வதங்கிய பின் தக்காளியைப் போட்டு வேக விடவும். ஒன்று சேரக் கொதித்தபின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கவும்.

இதைச் சப்பாத்தி, சாதம் இவற்றுடன் கலந்து சாப்பிடலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com