வெந்தயக்கீரை மெதுவடை
தேவையான பொருட்கள்

வெந்தயக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
சமையல் எண்ணெய் - பொரிப்பதற்கு
உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம்
பச்சைமிளகாய் - 5
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

உளுத்தம் பருப்பைத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும். இதை மிக்ஸியில் போட்டு, உப்பு, பெருங்காயத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். இந்தமாவில் வெந்தயக்கீரையைச் சேர்த்துக் கலந்து விடவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் ஒவ்வொரு வடையாகத் தட்டிப் போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமான பின்பு எடுத்து வடிய வைக்கவும். வெங்காயம் சேர்த்தும் தட்டலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com