நவம்பர் 2010: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
சில சமயம் புதிரில் வேறு வழியின்றி சில சொற்களை நிரப்பும்படி அமைந்துவிடுகிறது.
சென்றமாதம் "விண்ணைத்தொட" ஓர் உதாரணம். கொஞ்சம் கற்பனை வறட்சியால், நேரடியான விளக்கத்தைத் தந்ததால் சுவாரசியமின்றிப் போய் வழக்கமாக எளிதாக விடை கண்டுபிடிப்பவரில் சிலர் தவறிவிட்டார்கள். இம்முறை அதுபோல் இன்னொன்று வரும்போலிருந்தது, அதைச் சரிக்கட்ட குறளாக ஒரு குறிப்பை (குறுக்காக 4) அமைத்துள்ளேன்.

விசேஷமாக "முறுக்கு, லட்டு, புத்தாடை" போன்ற சொற்களின்றி அமைக்கப்பட்ட இப்புதிரை ரசிப்பீர்களென்று நம்புகிறேன். தீபாவளி வாழ்த்துகள்.



குறுக்காக

3. பல பிரதிகளை உருவாக்குமிடத்திற்கு நடிகர் தொடங்கிய வன்முறைப் போராட்டம் (5)

6.
இழுக்குந் தளையாம் இரும்பினில் பொன்னோ
கழுத்தினில் ஆடிடுங் காண் (4)

7. ஒரு நட்சத்திரம் வார இறுதியைச் சூழும் ராசி (4)

8. சொல்வதற்கு யோசிக்காமல் மங்காத வளையல் பொந்தின்றிக் கலைந்திடும் (6)

13. ஒரு காவியம் இறக்குமிடம்? (6)
14. இப்போதுதான் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிர் முடியாமல் அன்னை (4)

15. காட்டு பெரு நகரம் திரும்ப துளசி மாலையுடன் கண்ணன் (4)

16. அணித் தலைவரைத் தடுத்து மாற்றியதில் உடனே தொடர்வது (5)

நெடுக்காக

1. இனிய பருவம் பாதி மிச்சம் வந்த கோளாறு (5)

2. எல்லோருக்கும் தெரியும்படி முதலில் கத்திரி, பரங்கி கூட்டு செய்யவும் (5)

4. காதில் அணிவதற்கேற்ற தங்கம் மல்யுத்தத்தில் பெற்றது (4)

5. கருங்காளை முதல் வாரம் சென்றபின் இராசேந்திரன் வென்றான் (4)
9. சமய சடங்கு முடிவடைய வாய்க்காலில் கதவு (3)
10. தனது மாமி வேறுபாட்டால் தீவிரமற்றது (5)
11. கங்காவுக்கு மருமகளாக அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை (5)
12. ருக்மணி அருன்டேல் காலத்திற்கு முன்பு நாட்டியத்தில் ஈடுபடு (4)
13. நேர்மை தவறிய பெரிய இழப்பில் சாந்தமாய் மாறிவிடு (4)

வாஞ்சிநாதன்

அக்டோபர் 2010 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

© TamilOnline.com