லாஸ் ஏஞ்லஸ் தமிழ்ச் சங்கம் 'சங்கமம்'
ஆகஸ்ட் 21, 2010 அன்று, லாஸ் ஏஞ்சலஸ் வேலி பகுதியில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்த சங்கமம் நிகழ்ச்சி நார்த்ரிச் ஹாலில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை இசை, நடனம் நாடகம், பலகுரல் என்று பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இன்புற்றனர். நிகழ்ச்சிக்கு நிதியுதவி செய்த வசந்தா வில்லியம்ஸ் (Realtor), மதியழகன் (Mathi Travels) மற்றும் டேரான் (Loan Officer) ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.

புவனா ஜெயகுமார்,
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா

© TamilOnline.com