கனெக்டிகட்டில் ஆஷா நிகேதன் விழா
செப்டம்பர் 22, 2010 அன்று ஆஷா நிகேதனுக்காக (Friends of Asha Nikethan) நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்று நியூயார்க் ப்ரூக்லினில் நடந்தது. இந்தியாவின் ஐந்து மையங்களின் செயல்படும் லாப நோக்கற்ற நிறுவனமான ஆஷா நிகேதனால் பராமரிக்கப்படும் மனவளர்ச்சி குன்றியோரின் அன்றாட வாழ்க்கை மேம்பாட்டுக்காக நிதி திரட்டுவதே இவ்விழாவின் நோக்கம். நிகழ்ச்சியில் ஹனீஷ், மனீஷ் என்ற இரண்டு இளைஞர்கள் அற்புதமாகக் குச்சுபுடி நடனம் ஆடிப் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். இருநூற்று முப்பது நண்பர்கள் விழாவுக்கு வந்திருந்தனர். மூன்று நிர்வாக இயக்குநர்கள், ஒரு சமூக சேவகி ஆகியோர் மக்கள்நலப் பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டனர்.

ஆஷா நிகேதனுக்கு நீங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு. உங்கள் நன்கொடைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

Friends of Asha Nikethan
P.O.Box 182, Candlewood Isle
NewFairField, CT. 06812

© TamilOnline.com