அக்டோபர் 2010: ஜோக்ஸ்
ஒருவன்: டேய், நான் சும்மா பேசிட்டு அப்படியே ஓசில சாப்பிட்டுப் போறதுக்காக இங்க வரலடா...
மற்றவன்: சரிடா, அப்போ வழக்கமா அதுக்கு நீ எங்க போவ?

***


கோபு: டேய், சுட்ட பழம், சுடாத பழம் தெரியும். சிரிச்சபழம் பத்தித் தெரியுமாடா உனக்கு?
பாபு: தெரியாது. நீதான் சொல்லேன்...
கோபு: ‘அழுகாத’ பழம்தான் சிரிச்ச பழம்.

***


ராமு: என் மனைவி வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கறவடா.
சோமு: ஓ, அதுனாலதான் உங்க வீட்டுக் காபில பினாயில் வாடை வந்திச்சா!

***


நீதிபதி: உன் கடைசி ஆசை என்னப்பா?
குற்றவாளி: ஐயா, என்னைத் தலைகீழாத் தூக்குல போடுங்கய்யா... அது போதும்.

***

© TamilOnline.com