மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை


நடிகர் விஜய்காந்தின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் சட்டம் ஒரு இருட்டறை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை, மீண்டும் தயாரிக்க இருக்கிறார் அதன் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன். இன்றைய காலகட்டத்திற்கேற்ப கதையை மாற்றி, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படமாக்க உள்ளார். நாயகன், நாயகி, இதர கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com