கணிதப்புதிர்கள்
1. ஒரு மூன்று இலக்க எண்ணை 11ஆல் பெருக்கி வரும் விடையை 91ஆல் பெருக்கினால் வரும் விடை என்ன?

2. ஒரு பூங்காவில் சில குழந்தைகள் இருந்தனர். தனது பிறந்த நாளுக்காக பாலு அவர்களுக்கு சாக்லெட் கொடுத் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் 3 சாக்லெட் வீதம் கொடுத்ததில் 5 சாக் லெட்டுக்கள் மீதம் இருந்தன. ஒவ்வொரு வருக்கும் 4 சாக்லெட்

கொடுத்தால் 5 சாக்லெட்டுகள் தேவைப்படும். அப்படி யானால் குழந்தைகள் எத்தனை; சாக் லெட்டுகள் எத்தனை?

3. 8542 = 729316
5672 = 321489
இந்த எண்களின் சிறப்பு என்ன?

4. ஒரு தந்தை தனக்குப் பரிசாகக் கிடைத்த தொகையை பத்து சிவப்பு உறைகளில் $300ம், பத்து பச்சை உறைகளில் $200ம், பத்து மஞ்சள் உறைகளில் $ 100ம் ஆகப் போட்டு, மகன்களை உறையும், பணமும் சமாக இருக்குமாறு பங்கிட்டுக் கொள்ளக்

சொல்கிறார். சிறிது நேரம் யோசித்த மகன்கள் அவ்வாறே பங்கிட்டுக் கொள் கின்றனர். அவர்கள் எவ்வாறு பங்கிட்டிருப்பர்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com