தேவையான பொருட்கள் இட்லி அரிசி - 3/4 கிண்ணம் முழு உளுத்தம்பருப்பு - 1/2 கிண்ணம் காய்ந்த சோயா பீன் - 1/4 கிண்ணம் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி அல்லது புதினா - 1 கைப்பிடி உப்பு - தேவைக்கேற்ப அவல் அல்லது சாதம் - 1 கைப்பிடி.
செய்முறை: அவல் உபயோகித்தால் 1 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி, உளுந்து, சோயா பீன் இவற்றை 8 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி, உளுந்து, சோயா பீன், அவல் அல்லது சாதம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி மாவு பொங்கி வரும்வரை வைக்கவும். மாவை நன்கு அடியோடு மேலாக உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.
மிக கெட்டியாக இருந்தால் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மாவை தோசையாக வார்க்கவும். தோசையின் மேல் கொத்தமல்லி அல்லது புதினா இலைகளை தூவி மறுபக்கம் திருப்பிப் போட்டு உடன் எடுக்கவும். இந்த தோசை மிகமிக மெல்லியதாக வார்க்க வரும்.
சரஸ்வதி தியாகராஜன், பாஸ்டன் |