ஆங்கிலத்தில் குறுக்கெழுத்துப் புதிரின் வளர்ச்சியோடு அது தொடர்பான மென்பொருள்களும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன. இணையத்தில் சொல் விளையாட்டுகள் குறித்துப் பலரும் உருவாக்கியுள்ள படைப்புகளை
gtoal.com என்ற வலைப்பக்கத்தில் காணலாம்.
கட்டவலை உருவாக்குவது, சொற்களை நிரப்புவது இதெல்லாம் கணினிகள் செய்யக் கூடியதென்று எதிர்பார்த்தாலும் விடைகளைக் கண்டுபிடிப்பதிலும் கணினிகள் ஆக்கிரமித்திருக்கின்றன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், இம்மதப் புதிர் மன்னர் "crosswordmaestro.com" என்று தென்றலில் அறிவிப்பு வந்துவிடும் போலிருக்கிறது!
குறுக்காக
5. கல்லை உரு ஆக்க உதவுவது (2)
6. பிர்லா பத்திற்கும் உட்பட்ட முதலீட்டுக்கு மேலே வருமானம் கிட்டுமாறு செய்வார் (6)
7. ஏகப்பட்ட மேலாடை நாடகத்தளம் நீங்கிய முன்னே நினைத்து இருப்பது (4)
8. கட்டுக்கோப்பு மாறாத சித்திரமா என்ற கேள்வியோ? (3)
9. நவம்பரில் அக்டோபர் புரட்சியைக் கண்ட மாநகர் (3)
11. குயில் இசைக்க கடைசியாக வெள்ளம் பாய்ந்த ஆறு (3)
13. பூக்களுடன் ஓடாத் தண்ணீர் (4)
16. கவிஞர் வார்த்தையில் உயர்ந்தோங்க (6)
17. வீங்கு அல்லது கழி (2)
நெடுக்காக
1. சக்கரத்திலே மாட்டிக் கொண்டாலும் பின்னர் சுடப்பட்டாலும் பயனுள்ள பொருளாகும் (4)
2. சிம்லாவில் இருப்பவர் மாய்தலாலா உருமாறுவர்? (5)
3. அத்திசையிலுள்ள மரம் என்றாவது மலரும் (3)
4. போரில் விரும்பிய முடிவு இல்லை இறுதியாகச் சுண்ணாம்போடு செல்லும் (4)
10. இன்னொருத்தர் வில்லை முறித்தவனின் வில் (5)
12. நீரில்லாமல் பூச்சி இறகை இடையே செருகியது (4)
14. குளித்தபின்னர் கூழ் குடிப்பவர் கசக்குவது (4)
5. தோராயமாகத் தாக்கு? (3)
வாஞ்சிநாதன்
செப்டம்பர் 2010 விடைகள்:குறுக்காக: 5. பாளை 6. பதிப்பித்து 7. கடினமா 8. எதுகை 9. கத்தி 11. அமுது 13. ரசிகன் 16. ஏறக்குறைய 17. வசை
நெடுக்காக: 1. விளையாடி 2. ஞாபகமாக 3. மூப்பு 4. ஒத்தூது 10. திரவியம் 12. முற்றம் 14. கடுவன் 15. பகுதி
செப்டம்பர் புதிர் அரசிகள்:
யோகநந்தினி ஜனார்த்தனன், கலி.
லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா
அம்ருதா பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை
சரியான விடை எழுதிய மற்றவர்கள்:
சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சான் ஹோசே; R.நாராயணன், போல்சம், கலி.; லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர் சிடி, கலி.; மும்பை எஸ் ஹரிஹரன்; கி. கோபாலசாமி, அட்லாண்டா, ஜார்ஜியா; ராஜி வெங்கடசுப்ரமணியம், அசோக் நகர், சென்னை; ஹேமா இலக்குமிநாராயணன், சண்டியகோ, கலி.; பி. டி. அரசு, புது டில்லி; ராஜா செழியன், முள்ளியவாய்க்கால், இலங்கை; ஸ்ரீனிவாச ராமானுஜம், ஹனோவர் பார்க், இல்.; ஜி.கே. சங்கர்,பெங்களூர்; நிர்மலா ரவிச்சந்திரன், வியன்னா, வர்ஜீனியா;
குன்னத்தூர் சந்தானம்.