செப்டம்பர் 25, 2010 சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு சங்கீதாலயா இசைப்பள்ளி, 'சங்கீத ரசானுபவம்' என்னும் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது. இது ஜி.என். பாலசுப்ரமணியம், எம்.எல். வசந்தகுமாரி ஆகிய மாமேதைகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அமையும். ஜி.என்.பி. அவர்களின் நூற்றாண்டை ஒட்டி குரு ஹேமா சிஸ்டா அவர்களும் சங்கீதாலயா மாணவ மாணவியரும் இந்த நிகழ்ச்சியை அளிக்கிறார்கள்.
ஜி.என். பி அவர்களின் பிரதம சிஷ்யையான எம்.எல்.வி. ஓர் இசைப் புயலாவார். இசையில் பலரும் அடைய இயலாத எல்லைகளை ஆராய்ந்தவர், அபாரமான இசைத் திறனும், கடினமான கமகங்களை மிக எளிதாக, விரைந்து பாடிய வல்லுநர் என்ற பெருமைகள் படைத்தவர். எம்.எல்.வி அவர்களின் இசையால் ஈர்க்கப்பட்ட ஹேமா சிஸ்டா உயர்நிலை இசை நுட்பங்களை அவரிடம் கற்றார். துரிதமான பிருகாக்கள், கற்பனை மற்றும் படைப்புத் திறனுடன் எம்.எல்.வி. பாணியில் சிறிதும் பிறழாமல் பாடுவார். தனது மாணவ மாணவியரிடம் தனித்துவத்தை ஊக்குவிப்பார் எம்.எல்.வி. என்பதும் குறிப்பிடத் தக்கது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சங்கீதாலயா, எம்.எல்.வி. பாணியில் மாணவ மாணவியரைப் பயிற்றுகிறது. இப்பள்ளி மாணாக்கர்கள் கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை, பாபநாசம் சிவன் நினைவுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளனர். 'சங்கீத ரசானுபவம்' நிகழ்ச்சியில் ஈட்டப்படும் தொகை, கன்கார்டு சிவ-முருகன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.
நாள்: செப். 25, 2010, சனிக்கிழமை மதியம் 3:00 மணி இடம்: கபர்லி அரங்கம் (4000 Middlefield Road, Palo Alto, CA 94306) நன்கொடை: $15 தொலைபேசி எண்: 650.619.1513
தமிழில்: சரஸ்வதி தியாகராஜன் |