பொய்யழகன்


முன்னணி ஹீரோக்களை நம்பாமல் கதையையும் திரைக்கதையையும் நம்பி வெளியாக இருக்கும் படம் பொய்யழகன். தரமான படங்களை இயக்கி வெற்றி பெற்ற ​மலையாள இயக்குநர் சிபி மலயில் இயக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் நிஷான்,​​ ஆசிப் அலி,​​ ரித்து,​​ நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது சிபி மலயிலின் 25வது படம். ஒரு கல்லூரி மாணவியின் காதல்,​​ அவளையும் அவளுடைய குடும்பத்தையும் எப்படி பாதிக்கிறது என்பதை வித்தியாசமான கோணத்தில் காட்டும் இப்படம், ஒரே நேரத்தில் தமிழிலும் மலையாளத்திலும் வெளியாக இருக்கிறது. கதை,​​ திரைக்கதையை​ ஜி.எஸ். ஆனந்த்-நதீம் இணைந்து எழுத,​ ஏ.ஆர். அபிமன்யு வசனம் எழுதியிருக்கிறார். ​இசை: வித்யாசாகர்.

அரவிந்த்

© TamilOnline.com