செப்டம்பர் 2010: ஜோக்ஸ்
தாத்தா: என்னைப் பாத்து ஏன் ‘எந்திரன்’னு கூப்பிடறே?

பேரன்: ஆமாம் தாத்தா. உன் காதுல ஹியரிங் எய்டு, இதயத்துல பேஸ் மேக்கர், முறிஞ்சு போன எலும்புக்கு டைடேனியம் கம்பி, நீ நகர்றதே மோடரைஸ்டு வீல் சேர்ல. அதனாலதான்!

ஹெர்குலஸ் சுந்தரம்,
ஹெர்குலஸ், கலிஃபோர்னியா

*****
எழுத்தாளர்: சார், ‘சோப்பு’ன்னு ஒரு நாவல் எழுதியிருக்கேன்.

பிரபலம்: ரொம்ப சந்தோஷம்.

எழுத்தாளர்: அதுக்கு நீங்கதான் முன்’நுரை’ எழுதித் தரணும்!

அதிரை யூசுப்,
சன்னிவேல்

*****
என்னப்பா, தலைவருக்கு முன்னாலே பூ தூவிகிட்டு போகாம, பின்னாடியே தூவிகிட்டு வராங்க!

ஓ! அதுவா? அவரு தேர்தல்ல தோல்வி அடைஞ்சதுல இருந்து நடைப்பிணமா ஆயிட்டாராம். அதான்...

அதிரை யூசுப்,
சன்னிவேல்

*****
அதென்ன கல்யாண மேடையில மிக்ஸி?

ஓ! அதுவா? பொண்ணு ரொம்ப மாடர்னாம். அம்மி மிதிக்க மாட்டேன், மிக்ஸிதான் மிதிப்பேன்னு சொல்லிடுச்சாம்.

நூரணி சிவராம்,
ட்ராய், மிச்சிகன்

*****

© TamilOnline.com