அச்சிதழ்களை வாசிக்க இயலாத உடலியல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இணையம் வழியே நூல்களை வாசிக்கத் தரும் புக் ஷேர் (www.BookShare.org) நூலகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டியது. 60 பதிப்பாளர்களும் 2,200 தன்னார்வத் தொண்டர்களும் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் கல்விப் பொருட்களை இவ்வமைப்புக்கு உதவியுள்ளனர். தவிர, இருபதுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் ஒளிவருடிய (scanned) நூல்களை புக் ஷேருக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
புக் ஷேர் வழியே தென்றல் இதழ்களை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டில் 32 மில்லியன் டாலர் உதவித் தொகையை ஐந்தாண்டுக் காலத்துக்கு அமெரிக்கக் கல்வித் துறை வழங்கியது. பார்வைக் குறைபாடு போன்ற, வாசிப்பைச் சிரமப்படுத்தும் பிற உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் அதற்கான சான்றிதழைக் கொடுத்து புக் ஷேர் அமைப்பின் உறுப்பினராகிப் பயன்பெறலாம்.
செய்திக்குறிப்பிலிருந்து |