செப்டம்பர் 2010: குறுக்கெழுத்துப் புதிர்
சென்ற மாதப் புதிரில் சிபிச் சக்கரவர்த்தியின் கதையையொட்டி அமைக்கப்பட்ட குறிப்பில் தவறு செய்துவிட்டேன். புறாவை வேடனிடமிருந்து காத்ததாக எழுதியது சரியல்ல, கழுகிடமிருந்துதான் காப்பாற்றினார் என்று பலர் குறிப்பிட்டிருக்கின்றனர். தவறினைச் சுட்டிக் காட்டிய அனைவருக்கும் நன்றி. அதற்குப் பிராயச்சித்தமாக நானும் என் சதையை அறுத்து (மூக்கையறுத்து, நெடுக்காக 3இலும், முகத்தினை பயமுறுத்தக் காட்டி நெடுக்காக 9இலும்) வாசகர்களுக்கு இம்மாதப் புதிரை அளிக்கிறேன்.

குறுக்காக
5. வெடித்து மணியான பல்வரிசையிலிருந்து கள் வடியும் (2)
6. நூல் வெளியிட்டு புல்லானாலும் புருஷன் என்றிருக்கும் பாங்கு (6)
7. கனமாடி? அசைப்பது சுலபமில்லையோ? (4)
8. செய்யுளெழுதுபவரே பெண்ணுக்குப் பண்ணும் செல்விக்குக் கல்வியும் எவ்விதத்தில் ஏற்றது? (3)
9. முயல் இல்லாமல் முகத்தினை பயமுறுத்தக் காட்ட உதவும் (3)
11. அன்னம் அது முயல் தலையிட வரும் (3)
13. மன்றத்தில் இருப்பவன் இளவரசி கன்னியென்று கொள்வான் (4)
16. மேலே செல்ல பின்னர் தாழ துல்லியமில்லை (6)
17. சைவ மாறுபாட்டால் புகழ் இல்லை (2)

நெடுக்காக
1. ஆட்டத்தில் ஈடுபட்டு முளைக்காத போட்டி முனை (4)
2. மறக்காமல் வாரவிடுமுறை தொடக்கத்தில் கபமாக புரட்டிக் கொண்டு வரும் (5)
3. மூக்கறுப்பு மூன்றறுப்பால் சுருக்கத்தால் தெரிவது (3)
4. ஒருவனைத் தொடக்கத்தில் துத்தூ என்று குதறி பின்னர் இசைந்து செய் (4)
10. உயரம் குறைத்துக் குழப்பிய விதி செல்வம் தரும் (5)
12. பிஞ்சு நிலை போக இறுதியாக வெங்காயம் வந்தது நடு வீடு (4)
14. மந்திக்கு ஜோடி வடுகன் சரியில்லை (4)
15. ஊர் நடுவில் குற்றவாளி தலை சிக்கிய இடம் (3)

வாஞ்சிநாதன்

ஆகஸ்டு 2010 விடைகள்:

© TamilOnline.com