2006 மார்ச் 10 முதல் 12 தேதி வரை பிளேனோவில் (டெக்ஸாஸ்) அருள்மிகு கணேசர் சிலை நிறுவுதல் விழா சிறப்பாக நடைபெற்றது. பெரும் அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இங்கே கம்பீரமான பஞ்சலோக கணேசர் பீடத்தில் வீற்றிருக்கும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.
ஒரு கோவில் எழுப்பவேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக இருந்தபோதும், ஒன்பது மாதங்களுக்கு முன்தான் இறையருள் கூடியதால் திருப்பணிக் குழு ஒன்று அமைக்கப்பட்டு வேலை தொடங்கியது. இளைய தலைமுறையினர் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றி நிதியும் திரட்டினர். விரைவிலேயே இந்தக் கோவில் சொந்த இடத்திற்குச் செல்லும் கனவையும் இறைவன் மெய்யாக்குவான் என்பது எங்கள் நம்பிக்கை.
அதிக விவரங்களுக்கு: www.htnt.org
நளினி முள்ளூர் |