மனவளக்கலை SKY மாநாடு
2010 செப்டம்பர் 18,19 தேதிகளில் மனவளக்கலை அமைப்பின் எளிய குண்டலினி யோக (Simplified Kundalini Yoga) மாநாடு மௌண்டன் வியூ சமுதாய மைய அரங்கத்தில் (201 Rengstorff Ave., Mountain View, CA 94040) நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க மனவளக்கலை மன்றங்களின் ஆன்மீக ஆலோசகர் பேரா. திருமதி மீனா நாராயணசாமி, உலக சமுதாய சேவைச் சங்கத்தின் முக்கிய இயக்குனர்கள் பேரா. லட்சுமணன், பேரா. பாலசந்திரன், SKYUSA தலைவர் டாக்டர் விஜய் குப்தா மற்றும் பல முதுநிலைப் பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இடையறாத் இன்பநிலைக்கு வாழ்வை உயர்த்தும் மனவளக்கலையை வேதாத்திரி மகரிஷி உலகிற்கு அளித்தார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அன்பர்களுக்கு தியானப் பயிற்சி, மனவளக்கலை யோகம் பற்றிய விளக்கம் ஆகியவை அளிக்கப்படும். இதில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெறும்.

இணையதளம்: skybayarea.org ; www.vethathiri.org
மின்னஞ்சல்: register@skybayarea.org
தகவல் பெற: info@skybayarea.org - 510.456.8953
குறைந்தபட்ச நன்கொடை: $50
மேலும் விவரங்களுக்கு இந்த இதழில் பக்கம் ..... பார்க்கவும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com