'லாஸ்யா' வழங்கும் Navarasa-Her Choice
ஆகஸ்ட் 8, 2010 அன்று, ‘லாஸ்யா’ நடன நிறுவனம் வழங்கும் Navarasa-Her Choice என்னும் நாட்டிய நிகழ்ச்சி சாரடோகா மெஃகாபி அரங்கில் நடைபெற இருக்கிறது. பரதநாட்டியத்தைப் பராமரித்து வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட லாஸ்யா இதுவரை பதினைந்து நாட்டிய நிகழ்ச்சிகளை சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடா ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. இது பதினாறாவது.

இந்திய இலக்கியத்திலும், வரலாற்றிலும் சிறப்பிடம் பெற்ற நாயகியரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கதைகளைச் சித்தரிப்பதன் மூலம் காதல், வீரம், ஹாஸ்யம், கோபம், அருவருப்பு, பயம், கருணை, ஆச்சரியம், சாந்தம் எனும் நவரசங்களையும் வெளிப்படுத்துவதாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. மீரா, ஹீரா, சரோஜினி நாயுடு ஆகியோரின் வாழ்க்கைச் சம்பவங்கள் சித்திரிக்கப்படும்.

லாஸ்யாவின் இயக்குனரும், பிரபல நாட்டியக் கலைஞருமான வித்யா சுப்ரமணியன் நவரசா நிகழ்ச்சியை இயக்கியுள்ளார். “பெண் என்பவள் வாழ்க்கைக்கு ஆதாரமானவள். அவளது உணர்வுகள் அவளைச் சுற்றியுள்ளவர்களை இயக்கும் சக்தி வாய்ந்தவை. நவரசாவில் சித்திரிக்கப்படும் ஒவ்வொரு பாத்திரமும் ரசிகர்களின் இதயங்களை ஏதாவது ஒருவகையில் தொட்டுவிடும்” என்கிறார் வித்யா. லயமான நடனத்திற்கும் அபிநயத்திற்கும் பிரசித்தி பெற்ற வித்யா, நிகழ்ச்சியின் துவக்கத்தில் சிருங்காரம், ஹாஸ்யம், அற்புதம் ஆகிய உணர்ச்சிகளைச் சித்திரித்து நடனமாட இருக்கிறார். லாஸ்யாவின் முதுநிலை மாணவியர் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

நிகழ்ச்சிக்கு இசை ஆஷா ரமேஷ், வயலின் சாந்தி நாராயணன், புல்லாங்குழல் ராகவன் மணியன், மிருதங்கம் நாராயணன், தபலா விகாஸ் என்டுலூரி என்று பின்னணியும் ஒரு விருந்தாகவே இருக்கும்.

நாள்: ஆகஸ்ட் 8, 2010, சனிக்கிழமை
நேரம்: மாலை 4 மணி
இடம்: McAfee Theater Saratoga High School, Saratoga, 20300 Herriman Ave, CA
நுழைவுச்சீட்டு: $15 (ஒருவர்)
$50 (4 பேர் கொண்ட குடும்பம்)

அருணா கிருஷ்ணன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com