‘நாட்யா’ வழங்கும் இரண்டு நிகழ்ச்சிகள்
மற்றொன்றை எதிர்கொள்ளல் (Encountering the Other)

2010 ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1 வரை நாட்யாவுடன் சிகாகோவின் Mordine & Co நடனக் குழுமம் இணைந்து வழங்கும் இந்தப் புத்தாக்க நிகழ்ச்சியில் பரதநாட்டியமும் தற்கால மேற்கத்திய நடனமும் கைகோத்து ‘மற்றதை’ ஆராய்கின்றன. ஹேமா ராஜகோபாலனும் ஷர்லி மார்டைனும் நடனவடிவமைத்துள்ள இந்த நடன, கலை, கலாசாரம், சைகை, தத்துவம், குடும்பம் ஆகியவற்றை வெவ்வேறு கோணங்களில் அலசும்.

நேரம்: வியாழன்முதல் சனிவரை தினமும் மாலை 7:30 மணி.
நுழைவுக்கட்டணம்: $18 (முன்பதிவில்); $20 (நிகழ்ச்சியன்று); $15 (முதியோர்க்கும் மாணவர்க்கும்);
சீட்டுகள் வாங்க: Box Office at (312) 742-TIXS (8497)
இணையத்தில் வாங்க: www.dcatheater.org

பத்மா: மாலைநேர ரோஜா (Padma: The Evening Rose)

ஆகஸ்ட் 30, 2010 அன்று மாலை 6:30க்கு Jay Pritzker Pavilion (Millennium Park, North Michigan Avenue, Madison St.) அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். ஹேமா ராஜகோபாலன், கிருத்திகா ராஜகோபாலன் இருவருமாகப் படைத்துள்ள இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி மார்ச் 2011ல் ஹாரிஸ் அரங்கில் நிகழவிருக்கும் The Flowering Tree-யின் முன்னோட்டமாக அமையும். அனுமதி இலவசம்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com