தா


நீண்ட இடைவெளிக்குப் பின் முழுக்க முழுக்கக் கோயம்புத்தூரைக் கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் படம் 'தா'. இயக்குனர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ஆர்.கே. சூர்ய பிரபாகர் படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி, இயக்குகிறார். ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகமாகிறார். மும்பையைச் சேர்ந்த நிஷா கதாநாயகி. இவர்களூடன் பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஈழத்தமிழர் ஸ்ரீவிஜய் இசையமைக்கிறார். முரடன் ஒருவனுக்கு காதல் வரும்போது அவனுடைய மனதுக்குள் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் படம் தான் 'தா' என்கிறது படக்குழு.

அரவிந்த்

© TamilOnline.com