காதல் சொல்ல வந்தேன்


'தேவதையைக் கண்டேன்', 'திருவிளையாடல் ஆரம்பம்', 'மலைக்கோட்டை' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜி. பூபதிபாண்டியனின் புதிய படம் 'காதல் சொல்ல வந்தேன்'. இதில் 'கனா காணும் காலங்கள்' தொலைக்காட்சித் தொடரில் நடித்த பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். மேக்னா கதாநாயகி. ஆர்.சுந்தர்ராஜன், ஹீரா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர். இது என் கனவுப் படம் என்று கூறும் இயக்குனர், அனைத்துத் தரப்பினரையும் கவரும் படமாக நிச்சயம் இருக்கும் என்கிறார். பாடல்களை நா. முத்துக்குமார் எழுத, யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com