போடிநாயக்கனூர் கணேசன்


'தூத்துக்குடி', 'மதுரை சம்பவம்' வெற்றிப் படங்களையடுத்து ஹரிகுமார் நாயகனாக நடிக்கும் புதிய படம் 'போடிநாயக்கனூர் கணேசன்'. இதில் அருந்ததி கதாநாயகியாக நடிக்கிறார். ரவிஷங்கர், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவிமரியாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஓ. ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் படத்தை இயக்குகிறார். இதுவரை எந்தப் படத்திலும் இடம்பெற்றிராத மதுரை கள்ளந்திரியில் நடக்கும் மீன்பிடித் திருவிழாவை இப்படத்திற்காகப் படம்பிடித்துள்ளனர் என்பது கொசுறு தகவல். பாடல்களை நந்தலாலா, இளையகம்பன் எழுத, இசையமைக்கிறார் ஜான் பீட்டர்.

அரவிந்த்

© TamilOnline.com