தஞ்சையிலிருந்து நெல்லு


தஞ்சை மண்ணில் வாழ்ந்த ஓர் இளைஞனின் வீரமும் காதலும் செறிந்த போராட்ட வாழ்வை, விவசாயப் பின்னணியில் சொல்லவரும் படம் நெல்லு. சத்யா, கார்த்திக், ஜெய் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த பாக்யாஞ்சலி கதாநாயகி. இவர்களுடன் முக்கிய வேடங்களில் வர்ஷா, வாசு, விக்ரம், சிங்கமுத்து, கிரேன் மனோகர், ஓ.ஏ.கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ’கோலங்கள்', ‘நிஜங்கள்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எம். சிவசங்கர் படத்தை இயக்குகிறார். “விவசாயிகளின் அவல வாழ்வைச் சொல்லும் இப்படம், 1968-ல் நிகழ்வதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இறுதிக் காட்சி, ரசிகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்'' என்கிறார் இயக்குநர். இசை: எஸ்.எஸ்.குமரன். பாடல்கள்: தாமரை, நா. முத்துக்குமார். ‘களவாணி’ வெற்றியைத் தொடர்ந்து தஞ்சை மண்ணின் வாழ்வைக் கூறும் மற்றொரு படமாக வருகிறது ‘நெல்லு’.

அரவிந்த்

© TamilOnline.com