என்ன சார், தடிமனான ஃபைலைத் தூக்கிக்கிட்டு, பையனோட எங்க கிளம்பிட்டீங்க? வேலைக்கு இன்டர்வியூவா?
அதை ஏன் சார் கேக்கறீங்க! பொண்ணு பாக்கப் போறோம். இதையெல்லாம் பாத்துட்டுத்தான் பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிப்பாளாம் அதான்.
கலா ஞானசம்பந்தம், மௌண்டன்வியூ
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
*****
ஏண்டா, ஒங்க ஊர்ல பெரிய பூகம்பம் வந்ததாமே!
ஆமாம். அதுக்கு என்ன?
என்னவா? அதைக் கேட்டே நாங்கள்ளாம் ‘ஆடி’ப் போய்ட்டோம்!
ஹெர்குலஸ் சுந்தரம், ஹெர்குலஸ், கலிஃபோர்னியா
*****
அண்ணே நம்ம தலைவர் பழைய விஷயங்களை மறக்கலேனு நினைக்கிறேன்.
எப்படி சொல்றே ?
திறப்பு விழாவுக்கு கத்திரிக்கோல் வேணாம், என்கிட்ட அறுவாள் இருக்குன்னு சொல்லிட்டு முதுகுப் பக்கம் கைய விடுறாரு பாரு.
சரவணன்
*****
மனைவி: என்னங்க! கனவுல நாயா வருது.
கணவன்: அதனாலென்ன, கையில நாலு அஞ்சு கல்லை வச்சுக்கிட்டு தூங்கு.
சரவணன் |