கணிதப்புதிர்கள்
1. 1, 3, 4, 6 இந்த நான்கு எண்களையும் பயன்படுத்தி கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ மொத்தத் தொகை 24 வருமாறு செய்ய வேண்டும். இயலுமா?

2. அது 1 முதல் 9 வரை உள்ள அனைத்து எண்களையும் கொண்ட முழு எண். அதை ஒன்பதால் வகுக்கலாம். அந்த எண்ணின் இறுதி எண்ணை நீக்கிவிட்டால் 8ஆல் வகுக்கலாம். அதற்கும் முந்தைய எண்ணை நீக்கிவிட்டால் 7ஆல் வகுக்கலாம். வரிசையில் அதற்கும் முந்தைய எண்ணை நீக்கிவிட்டால் 6ல் வகுக்கலாம். இப்படியே அந்த எண் ஒன்று வரை மீதியில்லாமல் வகுபடும் என்றால் அந்த எண் எது?

3. வரிசையில் மறைந்திருக்கும் எண்கள் எது?

4 X _ / 8 + _ - 2 = 4.


4. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

101, 83, 67, 53, ........ ?

5. ஒன்று விட்டு ஒன்றாக உள்ள ஐந்து வீட்டுக் கதவு இலக்கங்களின் கூட்டுத்தொகை 175 என்றால் அந்த எண்கள் எவை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com