ஜூலைப் புதிரை அவிழ்த்த இருபதுக்கும் மேற்பட்ட வாசகர்கள் 'இடும்பைக்கு இடும்பை' தந்து என் வேலையைக் கடினமாக்கியுள்ளார்கள். 'கவரி' என்ற சொல்லுக்குச் 'சாமரம்' என்ற பொருள் உள்ளது தெரியவில்லை என்று சிலர் கூறியிருந்ததால், அகராதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். தற்காலத் தமிழுக்குக் க்ரியாவின் அகராதி, பழைய இலக்கியத்திலுள்ள சொற்களை அறிய பேப்ரிசியஸ், கதிர்வேலுப்பிள்ளை, வின்ஸ்லோ, சென்னைப் பல்கலைக்கழக அகராதி என்று பல இருக்கின்றன. சிகாகோ, http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/,, கொலோன் பல்கலைக்கழகங்களின் http://webapps.uni-koeln.de/tamil/ இணைய தளங்களில் கிடைக்கின்றன. வீதியில் அலங்கார வளைவுகள், போக்குவரத்தை நிறுத்தும் பேரணிகள் என்றில்லாமல், மொழி செம்மையா, வெண்மையா என்று பார்க்காமல் பல மொழிகளை வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஆழ்ந்து ஆய்ந்து வருகின்றன.
குறுக்காக:
3. பள்ளம் விழுங்கிய திப்பிலி குறைந்தது எவ்வளவு என்று கணக்கு போடு (5)
6. வருங்கால முதல்வரை மடக்கிய எமன் சட்டம், ஒழுங்கை கவனித்துக் கொள்பவன் (4)
7. செந்தில்நாதா கஷ்டம் ஆரம்பிக்க அனுபவத்தில் பெற்றது புரட்டுகிறதே (4)
8. ரத்தம் கலந்த சதையை வேடனுக்குத் தந்தவன் எல்லோருக்கும் தெரிந்தது (6)
13. பருப்பாலான தின்பண்டம் வைத்த பாத்திரம் புகலிடம் (6)
14. எள்ளை எண்ணெயாக்கும் கருவியை எடுத்த செந்தாமரைக்கு ஊதாப்பூ மரம் (4)
15. எடையுள்ள உடலின் அங்கம் தூக்கக் காட்சியிலா? (4)
16. நீராடுவதை இந்த ஊரில் பார்க்கலாமோ? (5)
நெடுக்காக:
1. ஆதி சங்கரர் கொல்லூரில் வீற்றிருக்கச் செய்த தேவி (5)
2. கவனமில்லாத கடல் வறண்டு கசிய அலட்டல் புரண்டது (5)
4. பட்டையடிக்குமிடத்தில் செம்மையாக இடப்படுவது (4)
5. சிவந்த பத்மா இருக்கையிலே ஒரே நேரத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கெல்லாம் பார்ப்பவன் (4)
9. பருமனில்லாத வடிவங் கொண்ட தின்பண்டம் (3)
10. சுழன்று வீசு மரியாதைக்குப் பொருந்துவது உடல்நலக்குறைவு (5)
11. உங்களுக்கும் எனக்கும் உரிய கனி கடை வெல்லம் என ஏற்கலாம் (5)
12. கொஞ்சம் அளிந்த தலை பரிமாற்றங்களால் குமுறு (4)
13. தூளாக்கிய பாதி இடை முத்தம் (4)
வாஞ்சிநாதன்
ஜூன் 2010 விடைகள்குறுக்காக: 3. இறகு 5. சிறைச்சாலை 6. கைலை 7. ருமானி 8. உறைக்கும் 11. பதுக்கல் 12. கவரி 14. நீசா 16. திக்கற்ற 17. குருணை
நெடுக்காக: 1. உசிதமானது 2. பூச்சு 3. இலைமறைவு 4. குகை 9. குறைவற்றது 10. அகத்திணை 13. அகழி 15. சாகு
ஜூலை 2010 புதிர் மன்னர் / அரசி பட்டியல்
அருணா ஸ்ரீனிவாசன். ஃப்ரீமாண்ட், கலி.;
கே.ஆர். சந்தானம், ஸ்ட்ரீம்உட், இல்லினாய்ஸ்;
ஷீலா கோபால், அட்லாண்டா, ஜார்ஜியா.
மற்றவர்கள்
வீ.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை 82; லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா; என். கிருஷ்ணன், அடையாறு, சென்னை; அம்ருதா பார்த்தசாரதி, சென்னை; ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமாண்ட், கலி.; ஸ்ரீனிவாச ராமானுஜம், ஹனோவர் பார்க், இல்.;
ரங்கராஜன் யமுனச்சாரி, டாம்பா, புலோரிடா ரா; ஜி. வெங்கடசுப்ரமணியம், அசோக் நகர், சென்னை; சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சான் ஹோசே, கலி.; எஸ்.பி. சுரேஷ், மயிலை; கே. ஆனந்த், சான் ஹோசே, கலி.; லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர்சிடி, கலி.;
ஹேமா இலக்குமிநாராயணன், சான் டியேகோ, கலி.; சிங்கநல்லூர் கணேசன், பாலோ அல்டோ, கலி.; பி.டி. அரசு, புது டில்லி; டாக்டர் சந்திரமௌலி, நேபர்வில், இல்.; விஜயராகவன் ஸ்ரீதர், மேடவாக்கம், சென்னை (ஜுன் & ஜூலை);
யோகநந்தினி ஜனார்த்தனன், சன்னிவேல், கலி.; ஹரிஹரன், மும்பை; மாலதி கண்ணன், தி நகர் (ஜூன்).