நியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006
அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) தேசிய அளவிலான 19-ம் ஆண்டு விழாவை நியூ யார்க் மாநகரின் மன் ஹாட்டன் சென்டரில் ஜூலை 1-3, 2006 தேதிகளில் கொண்டாட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

தமிழ் மொழி, இனம், பண்பாடு போன்ற வற்றைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலும் மறைந்து அல்லது மறக்கப்பட்டிருக்கும் பல தமிழ்க் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும் இம்மாநாட்டுப் பெருவிழா இருக்கும். தமிழின் எதிர்காலம், தமிழ் இளைர்களுக்கான அறிவுரை, உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு, நாளைய தமிழ்ச்சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனை கள் மற்றும் அவற்றிற்கான தீர்வு போன்ற கருத்துக்களை உள்ளடக்கியதாக நிகழ்ச்சி கள் இருக்கும். அதே வேளையில் களிப் பூட்டும் இதர பல நிகழ்ச்சிகளும் உள்ளன.

டாக்டர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் தமிழகப் பாரம்பரிய நாட்டியத் தோடு கூடிய நாட்டுப்புறப் பாடல்கள்; கவிப்பேரரசர் வைரமுத்துவின் சிறப்புச் சொற்பொழிவு; டாக்டர் அறிவொளியின் தலைமையில் நகைச்சுவைப் பட்டிமன்றம்; கவியரங்கம்; திரையுலக நட்சத்திரங்களே வழங்கும் திரையிசைப் பாடல்கள், ஆடல்கள்; மருத்துவர்கள் மற்றும் வணிகப் பெருமக்களுக்கான தனித்தனிக் கருத்தரங்கு கள்; இளைர்களுக்கான இனிய நிகழ்ச்சி கள்; அமெரிக்காவின் அனைத்து மாநிலத் தமிழ்ச்சங்கங்களின் சிறப்புக் கலை நிகழ்ச்சிகள்; கண்டு மகிழ எண்ணற்ற நிகழ்ச்சிகள்; உண்டு மகிழ அறுசுவை உணவு--இவற்றை இங்கே எதிர்பார்த்து வரலாம்.

தமிழகத்திலிருந்து வருகைதரும் சிறப்பு விருந்தினர்களோடு உரையாடியபடியே மன்ஹாட்டனைச் சுற்றி சொகுசுக் கப்பலில் உல்லாசப் பயணம் வரவும், இரவு விருந்துண்ணவும் ஏற்பாடு உண்டு.

மேலும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங் களையும் முன் பதிவு தொடர்பான விவரங்களையும் காண: http://www.fetna2006.org/

நடராசன் இரத்னம்

© TamilOnline.com