கொத்துமல்லி தோசை
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை:
அரிசியை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அரிசி, பச்சை மிளகாய், உப்பு, கொத்துமல்லி இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போடவும். தண்ணீரை வெதுவெதுப்பாகச் சுட வைத்து (கொதிக்க வைக்க வேண்டாம்) அதை மாவில் ஊற்றி, ரவாதோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். ரவாதோசை போல மெலிதாக ஊற்றி எடுக்க வேண்டும். மாவை அரைத்தவுடனேயே தோசை ஊற்றலாம். புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. எந்தவிதப் பருப்பும் சேர்க்க வேண்டிய தேவையில்லை. எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு இது.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



கலா ஞானசம்பந்தம்,
மௌண்டன்வியூ, கலிஃபோர்னியா

© TamilOnline.com