தமிழகத்தின் பல பிரபல நாடகாசிரியர் களின் நாடகங்களை அமெரிக்காவில் மேடையேற்றியுள்ள Stage Friends இப்போது சான் ஹோசேவில் வாழும் மணி ராம் அவர்கள் எழுதிய 'ரகசிய சினேகிதியே'வை அரங்கேற்றவுள்ளது. ஏப்ரல் 8 அன்று நியூ ஜெர்சியிலும், ஏப்ரல் 29 அன்று போஸ் டனிலும் இந்நாடகம் காணக்கிடைக்கும். முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ் குறித்துச் சில வார்த்தைகள். 1993-ல் தொடங்கிய இந்த நண்பர்கள் நாடககக் குழு இதுவரையில் சோ, கிரேஸி மோஹன், மெரினா, காத்தாடி ராமமூர்த்தி, விசு ஆகியோரின் பிரபல நாடகங்களையே தமது நடிப்பில் வழங்கி வந்துள்ளனர். இம்முறை அமெரிக்காவாழ் நாடக ஆசிரியர் மணி ராம் அவர்களின் நாடகத்தை நடித்துத் தர முற்பட்டுள்ளனது பாராட்டத் தக்கது. இவர்களது முந்தைய தயாரிப்புகளில் வசூலான நிதி பல தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டைச் செழுமைப் படுத்தியுள்ளது. 2005-ல் இவர்கள் சுனாமி யால் துயருற்றவருக்குச் சென்றது.
நாடகம் அரங்கேறும் விவரங்கள்: இடம்: நியூ ஜெர்ஸி நாள், நேரம்: ஏப்ரல் 8, 2006; மாலை 5:00 மணி இடம்: Bridgewater-Raritan High School, 600 Garretson Road, Bridgewater (NJ). நுழைவுக் கட்டணம்: $20, $15, $10 தொடர்புகொள்ள: ரமணி, தொலைபேசி 201-358-0001 மின்னஞ்சல்: Info@StageFriendsUSA.com இடம்: போஸ்டன் நாள்: ஏப்ரல் 29, 2006
அமைப்பு:
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( www.NETTamilSangam.org) இடம்: Winchester High School in Winchester, MA தொடர்புகொள்ள: பிரேம் நடராஜன், தொலைபேசி 978-443-3693 மின்னஞ்சல்: < a href="mailto:pNataraj@bbn.com">pNataraj@bbn.com
பிற இடங்களிலும் இந்நாடகத்தை மேடை யேற்ற விரும்புவோர் மேலே குறிப்பிட்டுள்ள ரமணி அவர்களுடன் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். |