கலிஃபோர்னியா தமிழ்க் கழக ஆண்டுவிழா
2010 மே 15, 16 நாட்களில் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் (CTA) தனது ஆண்டுவிழாவை கூப்பர்டீனோ, ஃப்ரீமாண்ட், ப்ளசண்டன், எவர்க்ரீன், ஃபாஸ்டர் சிடி மற்றும் ஃபோல்ஸம் கிளைகளில் விமரிசையாகக் கொண்டாடியது. 1600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழ்க்கல்வி அளித்து வருகிறது கலிஃபோர்னியா தமிழ்க் கழகம். (www.catamilacademy.org). ஆறு நகரங்களில் நடந்த இந்த ஆண்டு விழாக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆடல், பாடல், நடனம், மற்றும் நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். இயற்கை, பசுமைப்புரட்சி, கிராமியக்கலை, நாட்டுப்பற்று என்று பலவிதமான தலைப்புகளில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.

ஆடல், பாடல், வள்ளுவர், பாரதியார் காலத்துச் சங்கதிகள், வீரபாண்டிய கட்டெபாம்மனின் சீறும் வசனங்கள், அயல்நாட்டில் தமிழும், தமிழ்நாட்டில் அயல்நாட்டு மொழியும் என்றெல்லாம் விதவிதமான நாடகங்களில் வீர வசனங்கள், வேடிக்கைப் பேச்சுக்கள் பேசி கைதட்டலை அள்ளினார்கள். சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்தார்கள்.

முக்கிய நிகழ்ச்சியாக ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் தொண்டூழியர்களுக்கு முதல்வர்கள் சிறப்பு அன்பளிப்புத் தந்து கௌரவித்தனர். தமிழிணையப் பல்கலைக்கழகத்தின் மூலம் படித்துத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் முதன்மை மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களுக்கு பரிசு, பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.

முத்தாய்ப்பாக முதுநிலை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுப் பட்டம் வாங்கியது பெருமைப்பட வைத்தது. இந்த ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்கள் அம்ருதா துரை, ஆனந்த் கண்ணப்பன், இலக்கியா பழனிசாமி, கார்த்திகா செல்வகேணசன், குஹன் வெங்கட்ராமன், தினேஷ் ஜெயசங்கர், நிவேதிதா ஜெயசேகர், ஹன்ஸா கோபாலகிருஷ்ணன் மற்றும் ஹரீஷ் விஷால் சிவசங்கர் ஆகியோருக்குப் பாராட்டுகள்.

கோபால் குமரப்பன்

© TamilOnline.com