வறியோர்க்கு உணவு வழங்கல்
மே 17, 2010 அன்று மிட்வெஸ்ட் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி ஆகியவை இணைந்து ஹெஸட் ஹவுஸ் (Hesed House, 659 S. River Road, Aurora, IL: 60506) இல்ல வாசிகளுக்கு உணவு வழங்கினர். ஈழப்போரில் உயிர்நீத்தோரை நினைவுகூரும் வண்ணம் ‘தமிழர் நினைவு நாள்’ என்பதாக இந்நாளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட வறியோர்க்கு உணவு வழங்கியவர் பெரும்பாலும் தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள். உணவு மட்டுமின்றி மருந்து மற்றும் பிற அவசியமான பொருட்களும் வழங்கப்பட்டன. இவை தவிர, தமிழர் வரலாறு; தமிழீழத்தில் நடந்தது என்னவென்ற விவரம்; தமிழர் பெருமையைக் குறித்துப் பண்டைய மாபெரும் அறிஞர்களான மெகஸ்தனீஸ், பான் கோன், ஸ்ட்ரெம்போ, பெர்ப்ளூஸ், ட்வான் லின், யுவான் சுவாங், மார்க்கோ போலோ போன்றோரின் எழுத்துகள்; வள்ளுவரின் நாற்பது குறள் உள்ளடக்கிய தொகுப்பு ஆகியவையும் அளிக்கப்பட்டன.

வ.ச. பாபு,
இல்லினாய்ஸ்

© TamilOnline.com