இரவில் திருடன் பகலில் மாணவன்


'அங்காடித்தெரு' மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான நடிகர் மகேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை ஏ. வெங்கடேஷிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த பாலாஸ்ரீராம் இயக்குகிறார். எஸ். பாலாஜி தயாரிக்கிறார். மற்ற நடிக, நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. முக்கிய வேடத்தில் இயக்குநர் வெங்கடேஷ் நடிக்கிறார். இப்படத்தில் இரவில் திருடனாகவும், பகலில் மாணவராகவும் மகேஷ் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com