சத்யராஜ் நடிக்கும் ‘கலவரம்’


பிரபல இயக்குநர் டி. ரமேஷ் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் ’கலவரம்'. இதில் கதாநாயகன் சத்யராஜ். இவருடன் சுஜிபாலா, ராஜ்கபூர், அனுராதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மக்களின் நலனுக்காக நடக்கும் அமைதிப் போராட்டங்களில் சமூக விரோதிகள் ஊடுருவி, அதைப் பெரும் கலவரமாக மாற்றி விடுகின்றனர். அப்படிக் கலவரம் செய்பவர்களை அடக்குவதுதான் கதையின் கரு. அகிம்சையை போதிக்கும் காந்தியின் கையில் அரிவாளைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குநர் ரமேஷ். இசை: பைசர். பாடல்கள்: சினேகன். உதவி கமிஷனர் வெற்றிச்செல்வனாக இப்படத்தில் நடிக்கிறார் சத்யரா‌ஜ் என்பது கூடுதல் தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com