ரெடி தமிழில் உத்தமபுத்திரன்
தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட் படமான ’ரெடி’ தமிழில் 'உத்தமபுத்திரன்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் தனுஷ் நாயகன், ஜெனிலியா நாயகி. இவர்களுடன் பாக்யராஜ், கருணாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி, ஆர். சுந்தர்ராஜன், ஆர்த்தி உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். எல்லோரையும் கவரும் குடும்பப் படமாக இதனை உருவாக்கி வருவதாகக் கூறுகிறார் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் மித்ரன் கே. ஜவஹர். இவர் ஏற்கனவே தனுஷைக் கதாநாயகனாகக் கொண்டு ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.அரவிந்த்

© TamilOnline.com