தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் கடலைப் பருப்பு - 1/4 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி மிளகாய் வற்றல் - 5 உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயம் - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை அரிசியைத் தனியாகவும், மற்ற பருப்புகளை ஒன்றாகவும் ஒருமணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை மிக்ஸியில் அரைத்து கொழுக்கட்டை மாவுபோல் கிளறவும். பருப்புகளை உப்பு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கிளறிய கொழுக்கட்டை மாவுடன் அரைத்த பருப்பு விழுதைச் சேர்த்து, நன்றாகக் கலந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் ஓட்டை போட்டு இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவிடவும். கொலஸ்ட்ரால் கவலை இல்லாத சுவையான, வித்தியாசமான அடை தயார்.
இந்திரா காசிநாதன் |