CAIFA வழங்கிய சங்கீத மாலை
மே 1, 2010 அன்று சிகாகோ இந்திய நுண்கலைக் கழகம் (Chicago Academy of Indian Fine Arts - CAIFA) சங்கீதமாலை என்ற இசை நிகழ்ச்சியை ஹாப்மேன் பள்ளி அரங்கில் நடத்தியது. இதில் உன்னிகிருஷ்ணன் அவர்களின் கச்சேரி இடம்பெற்றது. எம்பார் கண்ணன் (வயலின்), அர்ஜுன்குமார் (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசித்தனர்.

மாலதி சந்திரசேகர் வரவேற்புரை வழங்க, சங்கீதக் கலைஞர்கள் குத்து விளக்கேற்றி, CAIFAவின் முதல் சங்கீத மாலை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அரங்கு நிறைந்த இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பந்துவராளி வர்ணத்துடன் தொடங்கிய கச்சேரி, சக்கரவாகம், தேவகாந்தாரி, ஹம்சநாதம் என்று விரிவடைந்தது. கல்யாண வசந்த ராகம்-தானம்-பல்லவி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அன்னமாச்சார்யாரின் ப்ரம்ம மொகடே பாடலுக்கு, ரசிகர்கள் தாளத்துடன் கை தட்டி உற்சாகப்பட்டனர். ரங்கா நன்றி உரை ஆற்ற, ராஜ் வரதன் பாரட்டுப் பத்திரம் வாசிக்க, லட்சுமி, வித்யா, ரஞ்சனி இசைக் கலைஞர்களுக்கு அப் பாராட்டுப் பத்திரங்களை வழங்கினர். CAIFA ஒரு லாப நோக்கற்ற அமைப்பு. இதன் அங்கமான 'பெப்பரப்பே' அமெரிக்க மாநிலங்களில் நாடகங்கள் நடத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு: caifausa.org

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com