நெய்வேலி சந்தான கோபாலனுக்கு விழா
2010 ஜூன் 26, 27 தேதிகளில் IMPART 25 USA (Imparting knowledge for 25 years) என்ற பெயரில் திரு நெய்வேலி சந்தானகோபாலனின் 25 ஆண்டு சங்கீத ஞான தானத்தைக் கொண்டாடும் விழாவை சன்னிவேல் ஹிந்துக் கோவிலில் (420 Persian drive, Sunnyvale CA 94089) அவரது சிஷ்யர்கள் கொண்டாட உள்ளனர். இரண்டு நாட்களிலும் காலை 9:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை விழா நடைபெறும்.

திரு நெய்வேலி சந்தானகோபாலனின் பக்தியும் பாவமும் கலந்த சங்கீதம் மிக ஜனரஞ்சகமானது. அவரது சங்கீத நுண்மை, தேர்ச்சி பெற்றவர்களையும், சாதாரண ரசிகர்களையும் ஒரே சமயத்தில் கவரக்கூடியது. 'இசைப் பேரொளி', 'கானப்ரிய ரத்னா' போன்ற பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர் வாய்பாட்டு மட்டுமல்லாமல் வீணை, மிருதங்கம், கஞ்சிரா முதலியவற்றிலும் தேர்ந்தவர்.

சந்தானகோபாலன் ஒரு சிறந்த குருவும் கூட. கடந்த 25 ஆண்டுகளாக அவர் சங்கீதத்தை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, நமது கலைப்பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் நிலைநாட்டும் சேவையில் ஈடுபட்டு உள்ளார். அவருடைய மாணவர்கள் உலகின் பல பகுதகளிலும் இருந்தபடி இணையம் வழியே அவரிடம் சங்கீதம் பயில்கிறார்கள்.

இரண்டு நாள் நடைபெற இருக்கும் இந்த விழாவில் கிளீவ்லாந்து VV சுந்தரம் மற்றும் பல பெரிய வித்வான்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இருபதுக்கும் மேற்பட்ட அவரது மாணவர்கள் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து வந்து பங்கேற்றுத் தங்கள் மரியாதையை தெரிவிக்க உள்ளார்கள். இந்த விழாவைத் தொடர்ந்து அவரது மகள் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் தன்னுடைய முதல் வளைகுடாப் பகுதிக் கச்சேரியைச் செய்ய இருக்கிறார். திருமதி அனுராதா ஸ்ரீதர், திரு ஸ்ரீராம் பிரம்மானந்தம் மற்றும் திரு மகாதேவன் ஆகியோர் பக்க வாத்யம் வாசிப்பார்கள். வளைகுடாப் பகுதியில் கர்நாடக இசை பயிற்றுவிக்கும் பல ஆசிரியர்களையும் இந்த விழாவில் கௌரவிக்க இருக்கிறார்கள்.

இசை ஆர்வலர்களும், ஆசிரியர்களும், மாணாக்கர்களும் விழாவில் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள். அனுமதி இலவசம்.

மேலும் தகவல்களுக்குப் பார்க்க வேண்டிய இணையதளம்: impart25usa.com / மின்னஞ்சல்: impart25@gmail.com

© TamilOnline.com