தமிழ்நாடு அறக்கட்டளை - அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி
ஜூன் 12, 2010 அன்று லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவுடன் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர்கள் க்ரிஷ், மஹதி, மாலதி, லக்ஷ்மன், TMS செல்வகுமார் ஆகியோர் இணைந்து பாடும் இன்னிசை நிகழ்ச்சி மில்டன் மையம், 86 ஸ்கூல் ட்ரைவ், அல்ஃபரட்டா, ஜார்ஜியாவில் நடைபெறும். நேரம் மாலை 3 முதல் 7 மணி வரை.

நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி தமிழகத்தில் படிப்பை இடையில் கைவிட்ட பள்ளிக் குழந்தைகளின் படிப்பிற்காகப் பயன்படுத்தப்படும்.

நுழைவுக் கட்டணம்: $25, $50, $100 (GATS உறுப்பினர்களுக்கு 20% தள்ளுபடி)

மேலும் விபரங்களுக்கு: lakshmansruthi.us
தொலைபேசி: ஆண்டாள் பாலு - (770) 993-2824
மின்னஞ்சல்: andal@tnfga.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com