ஆதிக்கம்


ரவுடிக் கூட்டத்தில் சேரும் அப்பாவி ஒருவன் வளர்ந்து தாதாவாகி, எம்.எல்.ஏ. ஆகி, அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வளர்ந்த பின் என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் படம் ஆதிக்கம். அனீஷ் என்னும் இளம் இயக்குநர் படத்தை இயக்குகிறார். காதல், நகைச்சுவை என மசாலாவாக உருவாகி வரும் இப்படம், ரவுடிகள் விரும்பித்தான் வன்முறை செய்கிறார்கள் என்பதை ஆணித்தரமாகச் சொல்ல வருகிறது. சமூகப் பிரச்னைகளை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் வித்தியாசமான கோணத்தில் ஒரு விறுவிறுப்பான படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர் அனீஷ். விவின் கதாநாயகனாக நடிக்க, மேகா நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஒரு ரவுடி எம்.பி. ஆவதுதான் படத்தின் ஒருவரிக் கதை.

அரவிந்த்

© TamilOnline.com