நானே என்னுள் இல்லை


நடிகை ஜெயசித்ரா, கதை, திரைக்கதை, எழுதி இயக்கி, தயாரிக்கும் 'படம் நானே என்னுள் இல்லை'. இதில் அவரது மகன் அம்ரேஷ் கணேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விசு, நாசர், கங்கை அமரன், சரண்யா, குயிலி, ராகவ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவன் எப்படி திரைப்படத்துறையில் ஈடுபட்டுப் பெரிய நடிகனாகிறான் என்பதுதான் படத்தின் கதை. கே.எஸ். ரவிகுமார், பி.வாசு ஆகியோர் படத்திலும் இயக்குநர்களாக நடிக்கிறார்கள். படத்தின் இசையமைப்பாளரும் அம்ரேஷ்தான் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com