கௌரவர்கள்


'ஆடுபுலி ஆட்டம்', 'வீரமும் ஈரமும்' போன்ற படங்களை இயக்கிய சஞ்சய்ராம், ஆர்.ஜி.பி. குரூப்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் 'கெளரவர்கள்'. தயாரிப்பதோடு இயக்குநராகவும் பொறுப்பேற்றிருக்கிறார் சஞ்சய் ராம். கதாநாயகன் சத்யராஜ். மற்றொரு நாயகனாக விக்னேஷ் நடிக்கிறார். யுவராணி, மோனிகா ஆகியோர் கதாநாயகிகள். இவர்களுடன் விஜய்ராஜ், செளகந்தி என்ற புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ரஞ்சித், பானுசந்தர், இயக்குநர் மனோஜ்குமார், ஆர்யன், ரமேஷ் கண்ணா உட்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு இசை தினா.

அரவிந்த்

© TamilOnline.com