பட்டா பட்டி
கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'பட்டா பட்டி'. கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக நடிக்கிறார் சடகோபன் ரமேஷ். கதாநாயகியாக ஹரிணி அறிமுகமாகிறார். மதுரையில் கதை நடப்பதாக அமைந்திருக்கும் இப்படத்தில் இணை இயக்குனர்கள் சிவம், கணேஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். வித்யாசாகரிடம் உதவியாளராகப் பல படங்களில் பணிபுரிந்த அருள் தேவ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார் யுவ்ராஜ்.



அரவிந்த்

© TamilOnline.com