தெரியுமா?: இளவயதில் எவரெஸ்ட் சாதனை
மிகவும் குறைந்த வயதில் எவரெஸ்ட் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளான் டெல்லியைச் சேர்ந்த சிறுவன் அர்ஜூன் வாஜ்பாய். டெல்லி ரியான் சர்வதேசப் பள்ளியில் படித்து வரும் அர்ஜூனுக்கு சிறுவயது முதலே ஏதேனும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவல். தளராத ஊக்கமும் பெற்றோரும், நண்பர்களும், ஆசிரியர்களும் அளித்த ஊக்கமும் கைகொடுக்க, தற்போது மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட மிகவும் குறைந்த வயது இளைஞன் (16) என்ற பெருமையை அடைந்திருக்கிறான்.

இதேபோல் அமெரிக்காவின் ஜோர்டான் ரொமேரோ (13) என்ற சிறுவனும் மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட சிறுவன் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறான். 10 வயதாக இருக்கும்போது ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமான கிளிமஞ்சாரோவில் ஏறி சாதனை படைத்த ஜோர்டான், தற்போது உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரத்தில் ஏறி புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறான். சீனப் பகுதியிலிருந்து எவரெஸ்ட் ஏறும் முயற்சியைத் தொடங்கி தனது தந்தை, தந்தையின் தோழி, மூன்று நேபாள நாட்டு கைடுகள் ஆகியோரது உதவியுடன் இந்தச் சாதனையை நிகழ்த்தினான் ஜோர்டான்.



© TamilOnline.com