கலிஃபோர்னியாவின் மத்திய மாவட்டத்தின் நீதிபதியாக முதன்முறையாக இந்திய அமெரிக்கர் விஜய் சி. காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் காந்தி 38 வயதானவர். அவர் கலிஃபோர்னியா சட்டக் கல்லூரியில் படித்தவர். பல்வேறு நிறுவனங்களுக்காக வழக்கறிஞர் பணியாற்றியவர். 12 வருடங்கள் பால், ஹேஸ்டிங்ஸ், ஜனோஸ்கி, வாக்கர் நிறுவனத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். பின்னர் அந்தச் சட்ட நிறுவனத்தின் பங்குதாரராக உயர்ந்தார். சட்ட நுணுக்கம் குறித்த பல நூல்களை எழுதியுள்ள இவர், நல்ல பேச்சாளரும் ஆவார். அமெரிக்க நீதித்துறை வரலாற்றில் மிகச்சிறிய வயதில் இப்பொறுப்பை ஏற்றிருக்கிறார் விஜய் காந்தி.
|