மார்ச் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மே 8-ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடைபெறும். புதுச்சேரியில் மே 3 மற்றும் 8 தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்.
ஏப்ரல் 13-ம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் துவங்கி, 20 வரை நடைபெறும். வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டுத் திரும்பப் பெற ஏப்ரல் 24-ஐக் கடைசி நாளாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுத் தேர்தலை ஒரே நாளில் நடத்துவதாகத் தேர்தல் ஆணையர் கூறினாலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளதாலேயே ஒரே நாளில் தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்திருக்கிறது என்று அ.தி.மு.க கூறுவது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் மே 11-ம் தேதி பிற்பகலுக்குள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தொகுப்பு: கேடிஸ்ரீ |