1. ராமுவிடம் 9 தங்க நாணயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றே ஒன்று மட்டும் எடை கூடுதலானது. இரண்டு முறை மட்டுமே எடை பார்த்து அதை அவன் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?
2. ஓர் அறையில் மூன்று விளக்குகள் தொங்கவிடப் பட்டிருந்தன. அதற்கான பொத்தான்கள் தொலைவில் உள்ள மற்றோர் அறையில் இருந்தன. எந்த விளக்கிற்கு எந்தப் பொத்தான் என்பதை எப்படிக் கண்டறிவது?
3. அது ஒரு நான்கு இலக்க எண். அதை 2ஆல் வகுத்தால் மீதம் 1 வருகிறது. 3ஆல் வகுத்தால் மீதம் 2. இப்படியே வகுக்க, 10ஆல் வகுத்தால் மீதம் 9 வருகிறது எனில் அந்த எண் எது?
4. கோபால் ஒரு பண்ணைக்குச் சென்றான். அவனிடம் $100 இருந்தது. ஒரு குதிரையின் விலை $10. ஓர் ஆட்டின் விலை $1. 8 கோழிகளின் விலை $1. 100 டாலரையும் செலவழித்த கோபால், மொத்தம் 100 மிருகங்களை வாங்கிக்கொண்டு வந்தான். எப்படி?
5. அது ஒரு பல இலக்க எண். அதன் இறுதி எண்ணான 2ஐ நீக்கி முதலில் சேர்த்தால் அந்தப் பல் இலக்க எண்ணின் இரு மடங்காக அது ஆகிறது. அந்த எண் எது?
அரவிந்த்
விடைகள்1. 9 நாணயங்களையும் A, B, C என மூன்று பங்குகளாகப் பிரிக்க வேண்டும். A, B இரண்டையும் ஒரு தராசின் ஒரு தட்டுக்களில் வைத்து எடை பார்க்க, இரண்டும் சமமாக இருந்தால் எடை அதிகம் கொண்ட நாணயம் C யில் இருக்கும் என்று அறியலாம். ஏதேனும் ஒரு தட்டு தாழ்ந்தால் அதில் அதிக எடை உள்ள நாணயம் இருக்கும். அதைக் கண்டறிய அந்த மூன்று நாணயங்களில் இரண்டை தராசின் இரு தட்டுக்களில் இட வேண்டும். தட்டு சமமாக இருந்தால் மூன்றாவது நாணயம் எடை மிகுந்தது. எந்தத் தட்டு தாழ்கிறதோ அதில்தான் அதிக எடை கொண்ட நாணயம் இருக்கும்.
2. முதல் பொத்தானை அமுக்கிவிட்டு 1 நிமிடம் கழிந்த பின் அணைத்துவிட வேண்டும். இரண்டாவது பொத்தானைப் போட்டுவிட வேண்டும். மூன்றாவது பொத்தானின் மீது கைவைக்காமல் அப்படியே விட்டுவிட வேண்டும். இப்போது அறைக்குள் நுழைய எந்த விளக்கு எரிந்து கொண்டிருக்கிறதோ அது இரண்டாவது பொத்தானுக்குரியது. எந்த விளக்கு கைவைத்தால் சற்றே சூடாக இருக்கிறதோ அது முதல் பொத்தானுக்குரியது. எது எரியாமல், குளிர்ச்சியாக இருக்கிறதோ அது மூன்றாவது பொத்தானுக்குரியது.
3. நான்கு இலக்க எண் = n
n + 1 / 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
n + 1 = 2 x 4 x 5 x 7 x 9 = 2520
n = 2520 - 1 = 2519.
அந்த எண் 2519.
4. ஒரு குதிரையின் விலை = $10
ஓர் ஆட்டின் விலை = $1
எட்டு கோழிகளின் விலை = $1
மொத்தம் நூறு மிருகங்கள் நூறு டாலர் எண்ணிக்கையில் என்றால்
1 குதிரை + 1 ஆடு + 8 கோழி = 10 மிருகங்கள் = 12 டாலர்
2 குதிரை + 2 ஆடு + 16 கோழி = 20 மிருகங்கள் = 24 டாலர்
.................
7 குதிரை + 7 ஆடு + 56 கோழி = 70 மிருகங்கள் = 84 டாலர்
7 குதிரை + 14 ஆடு + 64 கோழி = 85 மிருகங்கள் = 92 டாலர்
7 குதிரை + 21 ஆடு + 72 கோழி = 100 மிருகங்கள் = 100 டாலர்
ஆக 7 குதிரை, 21 ஆடு, 72 கோழிகளை கோபால் வாங்கி வந்தான்.
5. 105263157894736842. இதன் இறுதி இலக்கமான 2 ஐ நீக்கி முதலில் சேர்க்க = 210526315789473684. இது 105263157894736842 என்ற எண்ணின் இரு மடங்காகும்.